Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!

Saturday, December 12, 2015

கல்யாணம் - புது வீடு - வெளிநாடு

படித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு ?? !  வாழ்த்துக்கள்...
"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்" 
*
"வெளிநாடு வந்துப்பார்"......
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும் புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டார்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்தில் யாராவது ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....

"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".

****************************************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ஏன்னு தெரியல.... சும்மா சொல்லணும் போல தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே....!!

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......
இன்னும் இவர் போன்று எத்தனை உடன்பிறப்புகளோ... நண்பர்களோ.... தெரியவில்லை...

புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்

சென்னை மழை துன்பத்துக்கு அப்புறம், பாதிப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்தது, முக்கியமாக இழைனர்கள் முன்னுக்கு வந்து செய்த காரியங்கள்.. அரசியல், ஆட்சி, அதிகாரிகள் என்று எல்லாவற்றையும் தூசுதட்டி உருப்பட வைக்கலாம் என்ற ரொம்ப நல்ல பதிவுகள் எல்லாம் வந்துச்சு.. ஆனா இது எல்லாம் எவ்ளோ நாள் நீடிச்சுது ??? 
நாட்டுல மக்களுக்கு தெளிவு /சிறந்த அறிவு இல்ல, அதனால ஆட்சியாளன் சரி இல்ல, அதிகாரிகள் சரி இல்ல, இதனால ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான நல்ல கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரங்கள் எதுவும் இல்லாம பெரும்பான்மையான மக்கள் இருக்கோம்.. இப்படி ஒரு சுழற்சியில் சிக்கி (டெஅட்லாக்) மீளமுடியாமல் இருக்கோம்.
தமிழ் சினிமா, அதை பாக்கும் மக்கள் சீரழிய, நாசமா போக என்ன என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் மும்முரமா பண்றாங்க சிலர். ஒரு சிலர் இப்படி இவ்வளவு கீழ்த்தனமா கிளம்பீருங்க...
ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, யாருக்கோ கொஞ்சம் பேர்த்துக்கு தின்ன சோறு ஜீரணம் ஆகாமலோ, அடிச்சா மப்பு ரொம்ப அதிகமாகியோ, இல்ல ஏதோ மனநிலை சரி இல்லாம இருந்தப்ப, இதை பண்ணிடாங்க. அதை கண்டுக்காம விட்டுட்டு, நாம நம்ம வேலைய உருப்படியா பாக்க போயிருந்தா தான் என்ன.. ??
இந்த சிறுபுத்தி இருக்கும் மனுசங்க (அது கலைத்துறை'ல யாரா இருந்தாலும் - அதை ஆதரிக்கும் மக்களா இருந்தாலும்) இப்ப கேட்டு சிரிகுரவங்க / ரசிகுரவங்க, பின்னாடி இதுமாதிரி எதாவது உங்களுக்கு நடந்தா, குயோ முறையோனு கத்தும் போது மத்தவங்க இதே மாதிரி பண்ணுவாங்க அதை மறக்காம மனசுல வச்சுகிடுங்க....
இந்த சூழ் நிலையில்
- இதை எல்லாம் பார்த்து வளரும் இளைய தலைமுறை எப்புடி இருக்கும்.. ??
- பெற்றோரின் மிக சரியான வளர்ப்பு என்பது எவ்வளவு மெனக்கெட்டு பார்த்தாலும் சுலபமானது இல்லை, அல்லது பல பேருக்கு இது சாத்தியமே இல்லை என்பது மிகவும் வருத்தம் தரும் உண்மை.. 
இனி வரும் தலைமுறைக்காவது நல்ல இயற்கையோடு ஒன்றிணைந்த சுற்றுச்சூழலும், வாழ்க்கை முறையும் நட்பன்புகளும் வரும்னு கனவுல மட்டும் தான் நினச்சுக்கனும் போல..
இப்போ எனக்கு, எங்க பாட்டி ரொம்ப வெறுத்து போனா சொல்லும் வரி தான் ஞாபகம் வருது "எப்படியோ இதெல்லாம் கடந்து போய்டும், யாரு கண்டா நாசமா போகாம இனிமேலாவது புத்தி வந்து உருப்படியா பொழச்சா சரி தான்"

Friday, December 4, 2015

மனிதனும் இயற்கையும் மனிதமும்

இன்றைய தேதிக்கு சென்னையிலும் கடலூரிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் இயற்கையின் சீற்றமும் அதனால் மக்களின் வாழ்க்கை நிலையம் கண்கூடாக பார்க்கிறோம்.

இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் வெறுமனே வருத்த பட்டு என்ன பயன், ஒன்றும் இல்லை...

இயற்கையாகவே மனிதனுக்குள் மனிதம் இருக்குமா என்பது தெரியாது, ஆனால் வளரும் சூழல் அதை தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்..
இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் இதனால் மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி என்று எவ்வளவோ பிரிவினையிலும், இயந்திர மற்றும் இயற்கைக்கு எதிரான முரணான வாழ்கையும், ஆசைகளும் இப்படி எண்ணற்ற காரணங்களால் பிரிந்து திரிந்த மக்களுக்கு இப்போதைய இயற்கை சீற்றம் சொல்லி வைத்த பாடம் இதுதான் "மனிதமும் இயற்கையும் அடிப்படையாக அரவணைத்து கொண்ட வாழ்க்கை தான் நிலையானது , நிம்மதியானது , அதுவே நம் அனைவரின் நெஞ்சார்ந்த விருப்பமும், ஆனால் ஏதோ காரணங்களால் தெரிந்தே இதெல்லாம் மறந்து ஓட / வாழ பழகிவிட்டோம்.. இப்போது பாருங்கள் "மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி " என்று எந்த பாகுபாடில்லாமல், அனேகமாக அணைத்து அல்லது பெரும்பாலான மக்கள் உதவுவதும், உறுதுணையாக இருபதும்.. நம் சுயரூபம் ஒருவேளை இது தானோ ?? ஒரு வேலை இருக்கலாம் .. !!

இப்பொழுது
நம் அனைவரும்
- யார் எவ்வளவு உதவி செய்தார்கள், செய்யவில்லை, ஏன்
- யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் , கொடுக்கவில்லை, ஏன்
- இது யாருடைய குற்றம்,
என்றெல்லாம் இப்போது விவாதிச்சு - பகிர்ந்து பெரிதாக என்ன ஆகிவிட போகிறது.??  ஆகையால்
- உங்கள் நன்றிகளையும், வருத்தங்களையும், பெருமைகளையும் நிச்சயம் பிறகு ஒரு நாள் பதிவு செய்யலாம்.

இன்றைய உடனடி தேவை : மனித நேயத்தோடு.... .... ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இந்த இடரினைக் கடக்க வேண்டும் என்பதே!

இனி நாளைய விடியல் என்பது : இனிமேலாவது "மனிதமும் , இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதும் - அல்லது குறைந்தபட்சம் முரணாக - எதிராக வாழ்வதை தவிர்ப்பது. ". -- இன்றைய இந்த துன்ப கணங்கள் நமக்கு மறுபடியும் ஞாபக படுத்திவிட்டு சென்றுள்ளது இது ஒன்றே ஒன்று தான் ...

இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு செழிக்கட்டும்.
மனிதம் மலரட்டும் .

Sunday, May 17, 2015

ஈழ இறுதிப் போரின்போது

பகிர்வுக்கு நன்றி :  ஷாலினி செல்வநாதன்

ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை.


தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை
ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி.

இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவு செய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழத்தில், இவரை 'தமிழ்க் கவி அக்கா’ என்று அழைத்தார்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவத் தாதியாகவும், புலிகளின் குரல் வானொலி மற்றும் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணி செய்தவர் தமிழ்க் கவி. பேட்டிக்கான வடிவமாக இல்லாமல் நினைவின்போக்கில் பேசினார்.

முள்ளிவாய்க்காலிலேயே முடிந்துபோக வேண்டிய வாழ்வு, நகர்ந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாவிலாறில் தொடங்கி வட்டுவாகலில் முடிந்த பேரழிவுப் போரின் சாட்சி நான். எங்கள் பயணம், நாங்கள் கைவிட்ட நம்பிக்கைகள், மரணங்கள், கனவுகள், இழப்புகள்... என ஈழத் தமிழ் சமூகம் எப்படி இறுதிப் போரை எதிர்கொண்டது என்று நாவலில் எழுதியிருக்கிறேன். நாவலில் வரும் அந்தப் 'பார்வதி’ நான்தான்.
நான் பிறந்து வளர்ந்தது வவுனியாவில். கதை, கவிதை, நாடகங்கள் எழுதுவேன் என்பதால், புலிகள் என்னை நாடகம் போடச் சொல்வார்கள். நானும் கிராமங்களில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினேன். என் கடைசி மகன் சிவகாந்தன், புலிகள் அமைப்பில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டான். இயக்கம் அவனுக்கு 'சித்திரன்’ என்று பெயர் வைத்தது.

91-ம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் அவன் வீரச்சாவை அடைந்தான். தம்பி, வீரச் சாவடைந்ததும் அவனது அண்ணனும் 'அமைப்புக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோது, நான் தடுக்கவில்லை. அவன் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே, விமானத் தாக்குதலில் இறந்தான். என் இரு பிள்ளைகளின் உடல்களையும் நான் காணவில்லை.

குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிக்குச் சென்று நானே விரும்பி புலிகள் அமைப்பில் இணைந்து, ஒட்டுமொத்தமாக என் குடும்பத்தையே ஈழப் போராட்டத்துக்குக் கொடுத்தேன். காரணம், புலிகளின் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு. இரு மகன்களை இழந்த பின்னரும் அமைப்பின் மீதும், போராட்டத்தின் மீதும் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்ட தலைவர் பிரபாகரன், நேரடியாகவே என்னை அழைத்து ஊடகப் பணிகளை வழங்கி ஊக்குவித்தார்.

வாழ்க்கை எப்போதுமே எங்களுக்கு வசந்தமாக இருக்கவில்லை. ஒரு தீப்பெட்டி 10 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெட்ரோல் ஒரு லிட்டர் 1,500 ரூபாய். 10 தீப்பெட்டிகளின் மருந்தை எடுத்தால் ஒரு நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்க முடியும் என்பதால், ஏராளமான தீப்பெட்டிகள் கடத்தலில் வரும். மற்றபடி போர்க்காலமாக இருந்தாலும் சமாதானக் காலமாக இருந்தாலும், மின்சாரம், மருத்துவப் பொருள்கள் என எதுவுமே மக்களுக்கு இருந்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் விறகுக் கட்டைகளும், 'டிரெஞ்ச்’ எனப்படும் பதுங்குகுழிகளும்தான். இப்படித்தான் 2008-ம் ஆண்டு வரை வாழ்க்கை ஓடியது.

ஆனால், அப்போதெல்லாம் 'நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூட, எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே! மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்!

மாவிலாறில் தொடங்கிய போர், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எங்குமே புலிகளை இராணுவமும் பார்க்கவில்லை, இராணுவத்தைப் புலிகளும் பார்க்கவில்லை. அந்தப் போர் முறையே புதிதாக இருந்தது. நான்கைந்து மைல்களுக்கு அப்பால் இருந்து எறிகணை களை வீசி நிர்மூலமாக்கித் துடைத்து அழித்துவிட்டுத் தான் இராணுவம் வரும்.

கிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, மக்கள் கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டு வட்டக்கச்சி, தருமபுரம் விசுவமடு நோக்கி நகர்ந்து விட்டார்கள். மக்கள் இல்லாத கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது. பல திசைகளில் இருந்தும் வந்த மக்கள் அக்கராயன் சந்தியில் கூடியபோது சுமார் மூன்று லட்சம் மக்கள் மிகச் செறிவாக இருந்தனர்.

தேவிபுரத்தில் இருந்தபோது வீசப்படுகிற ஒவ்வொரு ஷெல்லும் பழுதில்லாமல் யாரோ ஒருவரைப் பதம் பார்த்தது. மக்கள் நம்பிக்கையோடு கொண்டுவந்த வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் முதலில் கைவிட்டார்கள். அது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையையும், கனவையும், ஆசைகளையும் கைவிடுவதாக இருந்தது.
பதுங்குகுழி பங்கர்களை, மூன்று அடிக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாது. கீழே தண்ணீர் வரும். தோண்டிய பங்கருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, என் எதிர் பங்கருக்குள் அமர்ந்து பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே பேசிக்கொண்டிருந்த ஓர் இளம் தாய் அப்படியே சாய்ந்தாள். இடுப்புக்குக் கீழே அவளுக்கு எதுவுமே இல்லை.

முலைக்காம்பில் வாய் வைத்தபடியே சிதறி விழுந்தது குழந்தை. பொக்கணை எனும் குறுகலான இடத்தில் நிலைமை இன்னும் மோசம். வாழ்ந்த இடம் மயானமாக மாறியது என்று சொல்வதா? அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா? அங்கேயே பல நாட்களைக் கழித்தோம்!'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் தமிழ்க் கவி.
கரையான் முள்ளிவாய்க்காலில் யுத்த முனையில் பொட்டம்மானின் மகன் கயல்கண்ணன் இருந்தார். ஒரு பங்கருக்குள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் அப்படியே இறந்துபோனார். இறந்துபோன பிணங்களைக்கூட யாரும் எடுத்து அடக்கம் செய்யவில்லை. மகளின் பிணத்தை தாய் கடந்து செல்கிறாள். தாயின் பிணத்தை மகள் கடந்து செல்கிறாள்.

பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர்.
ஒருநாள் பிரபாகரன் முக்கியமான தளபதிகளை அழைத்து, 'நம்பிக்கையோடு இருப்போம். சர்வதேசமும் சேர்ந்து நம்மை நசுக்குகிறது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை விதையுங்கள். அவநம்பிக்கை ஏற்படும் வகையில், மக்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்!

இறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை. கடற்புலிகள் பலம் இழந்தார்கள். புலிகளின் மோட்டார் படையணி முற்றிலும் அழிந்து போனது. குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இராணுவத்தின் வான்வழிப் போருக்கு முன் எடுபடாமல் போயின. அந்த ஆயுதக்கிடங்குகளை வெடி வைத்துத் தகர்த்து, அதனுள் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட போராளிக் குடும்பங்கள் உண்டு.

ஆயுதங்களை மௌனமாக்க வேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. அவை, பல நாட்களுக்கு முன்பே மௌனமாகிவிட்டன. அவர்களுக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்களும் வரவில்லை. ஒருகட்டத்தில் தன் வலுவை இழந்த புலிகள், மக்களை அவர்களின் விருப்பங்களுக்கே விட்டனர். மக்களுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? சரணடையலாம்... இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா? என்ன செய்வது... தலைகுனிந்தபடியே கூட்டம் கூட்டமாக நடந்தோம்.
நான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

நானும் பல பெண் போராளிகளும் விடுவிக்கப்பட்டோம். எங்களை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புனர்வாழ்வு என்று சொன்ன அரசும் கண்டு கொள்ளவில்லை. எங்களைக்கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதுதான் நிலை. இப்போது நாங்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே வாழ முடியும்?

Friday, May 15, 2015

அழகாய் ஒரு அன்-ப்ரெண்ட் (unfriend)


இன்னைக்கு காலைல FB வந்ததும் எனக்கு தெரிஞ்ச விசயங்களே பாத்து எனக்கு தோணினது இது தான்..



















நேத்து வரைக்கும் ப்ரெண்ட்  லிஸ்ட்ல இருந்த ஒரு நபர் இன்னைக்கு திடீர்னு இல்ல, ஆனா இதுலே எனக்கு தெரிஞ்சு ஒரு காரணமும் என்னால் யோசிக்க முடியவில்லை, அதெல்லாம் இனி நான் யோசிக்க போறது இல்லை...  ஒரு வேலை அவங்களுக்கு ஏதும் காரணம் இருக்கலாம்..


இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், ஏனோ தெரியல, என்னை அறியாமல் என்னில் ஒரு சிறு புன்னகையும் #அன்பே சிவம் படத்தின் இந்த வசனங்களும் நியாபகம் வருது.. அதை எனக்கு தெரிஞ்ச மாதிரி என்னோட விளக்கமும் சேர்த்து இங்கே பதிக்கிறேன்...

குறிப்பு :  எனக்கு தமிழோ, கவிதையோ , தெரிஞ்ச வசனங்களோ கூட மிக சரியாய் எழுத்து / இலக்கண  பிளை இல்லாம எழுத/சொல்ல வராது..  முடிஞ்சவரை சரியாய் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு  இருக்கேன். அதனால இதை படிக்க நேரும் நபர்கள் இதை கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. நேரமும், மனமும் இருந்தால் பிழைகளை சுட்டிகாட்டுங்கள் , திருத்திகொள்கிறேன்.

முதலில் காரணம் கருதி என்னை பற்றி கொஞ்சம் : 
எனக்கு தாய் மொழி தமிழா இருந்தாலும் ஆரம்ப பள்ளி முதல் பட்ட மேல்படிப்பு, வேலை என்று இன்று வரை ஆங்கில வழி கல்வி மற்றும் அதை சார்ந்தே இருந்தததும்,  என் சுற்றம், சூழ்நிலை, நண்பர்வட்டம்  மற்றும் பல காரணங்களால் என்னால் தாய் தமிழை பாடப்புத்தகம் தவிர்த்து வேறு ஏதும் படிக்கவோ ருசிக்கவோ முடியவில்லை.. பள்ளி மேல்படிபிலும் என் கையெழுத்து நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் என்னை அடையாளம் கண்டு கொண்ட தமிழ் அய்யாவின் அன்பாலும், தயவாலும் கொஞ்சம் ஊக்கம் கிடைத்தது.  எனக்கு தாய்மொழி வலி சிந்தனை இல்லாமல் ஆனதை எண்ணி பலமுறை மிகவும் வருந்தி இருக்கேன்..  அதற்க்கு முயற்சியும் வழியும் தேடி அலைந்தும் இருக்கிறேன்..  இதனால் கல்லூரியில் பட்ட மேல்படிப்புக்கு எனக்கு தமிழ் / ஆங்கில இலக்கியம் படிக்கவே ஆர்வம், ஆசை இருந்தும், பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தில் அது முடியாமல் போனது.  கல்லூரி நாட்களில் (முதல் வருடம் மட்டும்) தமிழ் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களின் தயவாலும் கொஞ்சம் படிக்கச் நேர்ந்தது.. ஆனால் அது முதல் வருடம் மட்டுமே. பின்னாளில் அது ஏனோ முடியாமல் போனது..  ஆனால் அதற்கு எல்லாம் ஒரு ஆறுதலாய் இருந்தது இந்த முகபுத்தகம் /ப்ளாக்  தான்.                   

இப்போது நான் சொல்ல விரும்புவது :

அன்புள்ள சகமனிதருக்கு,

                    எனக்கு எழுத்து உலக அனுபவம், தமிழ் புலமை எல்லாம் சுத்தமாவோ, இல்ல நீங்க எதிர்பாக்குற அளவுக்கு இல்லாமல் இருந்தாலும்,சில வருஷம் முன்னாடி, இந்த (முகபுத்தகம் /ப்ளாக்) எழுத்து உலகம் எனக்கு சுத்தமா பரிச்சியபடாத  அப்போ , நான் பார்த்த/படிச்சு எழுத்துக்கள் எளிமையா எனக்கு கொஞ்சமாவது புரியுரே மாதிரி எழுதின நெறைய நபர்கள்ள நீங்களும் ஒருத்தர்...  நேர காலம் இல்லாம 24/7 ஆபீசே கதின்னு இருந்த கால கட்டம் அது. வேற எந்த பொழுதுபோக்கும் வடிகாலும் இல்லாம ரொம்ப பைத்தியம் புடிகுரே மாதிரி  ரணமா இருந்தப்ப  முகபுத்தகம் /ப்ளாக் தான் எனக்கு நல்ல உறுதுணையாக இருந்துச்சு.. அதில் நான் படிச்சு ரசிச்ச கவிதைகள் / கதைகள்ல / கட்டுரைகள் எல்லாம் என்னை ரொம்பவே கவர்துச்சு..  அதில் இருந்த பலரின் எழுத்துக்கள்ள உங்களுடையதும் ஒன்னு.. இவை எல்லாம் என்னை ஒரு அளவுக்காவது நல்ல முறையில் பாதிச்சிருக்க வேண்டும்.. அதனால் தான் அதுக்கு பின்னாடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகபுத்தகம்  /ப்ளாக்  தான் எனக்கு நல்ல தோழமையா இருந்ததை உணர்ந்தேன்.

இப்படி ஒரு சமயத்தில் சிறு காலமேனும் உங்கள் வலைப்பூவில் முகப்புத்தக பக்கத்தில் எனக்கு தெரிந்ததை கிறுக்க அனுமதி அளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்... 

உங்கள் "பதிவுகள்" பத்தின என் அனுபவங்களை நெறைய சொல்லலாம், ஆனா குடுத்த காசுக்கும் மேல கூவுரானே'நு ஒரு இளக்காரமான நினைப்பை யாருக்கும் வர வைக்க வேண்டாம்னு சொல்லல.     

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யார் கிட்டயும் நான் நன்றியும் மன்னிப்பும்  தக்க சமயத்தில்  சொல்லவோ கேட்கவோ  கூச்ச பட்டதே இல்ல. உங்க கிட்டயும் நன்றியும் சரி மன்னிப்பும் சரி ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்சு கேட்கனும்னு தேவைப்பட்டபோ, தோனினப்போ கேட்டிருக்கேன்.. இருந்தாலும் இப்போதும் ஒரு முறை சொல்லிகிறேன்..   என்னை அறியாமல் நான் ஏதும் உங்களை புன்படுதீருந்தா என்னை மன்னிச்சிடுங்க.

http://hari1103.blogspot.com/2013/06/i-want-to-say-sorry-thank-you.html

http://hari1103.blogspot.com/2013/06/sorry-and-thank-you.html


எண்ணையும் இவ்வளவு நாள் மதிச்சு ( !! ??) இல்ல பொறுத்துகிட்டு, இப்பவும் அன்-ப்ரெண்ட்  பண்ணினாலும், பிளாக் பண்ணாம, இது வரைக்கும் நான் சொன்னதுக்கு (கேட்ட கேள்விக்கு, கமெண்டுக்கு எல்லாம்) நேரம் ஒதுக்குன உங்களுக்கு ரொம்ப நன்றி..

எளிமையா எனக்கு (மொழி தெரிஞ்ச எல்லாருக்கும்) புரியுரே மாதிரி இருகுங்குரே ஒரே காரணத்துனால..  உங்களோட நெறைய எழுத்துக்கள் பதிவுகள் இப்பவும்  எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பவும் இனிமேல் எப்பவும். :) 


இனிமேல் உங்க பொழப்ப கெடுக்க (தொல்லை பண்ண)  மாட்டேன். பொழச்சு போங்க ...  :P   ஹ.ஹ.ஹ.. 

அடுத்த விநாடி ஒளிந்துகிடக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்..
உங்களை சந்தித்தது கூட  அப்படிப்பட்ட  ஒரு ஆச்சர்யம் தான்..
ஆச்சர்யங்கள்  நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.. 
 


அன்பு நன்றிகளுடன் 
ஹரி ஷங்கர்.

நீங்களும், இனி நானும் சரி "இதுவும் கடந்து" போய்டே இருக்கே போறோம்..   :)

Friday, April 3, 2015

ஊடல் எனும் நாடகம்


நன்றி  -►    இந்திரா கிறுக்கல்கள்

Courtesy & Thanks (Source)  :  FB_LinkBlog_Link

குறிப்பு : இந்திரா கொடுத்துள்ள புகைப்படங்கள் சரியாக தெரியாதபடியால், நான் அதை மட்டும் மாற்றி அமைத்து இருக்கிறேன்.

என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?
பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே..

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..

அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..

பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.

பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..















ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..

உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..

எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..

உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..

என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..

ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..

Tuesday, March 31, 2015

ஸ்பரிசம்


நன்றி  -►   இந்திரா கிறுக்கல்கள் 

Courtesy & Thanks (Source)  :  FB_LinkBlog_Link

ம.வே.சிவகுமார் எழுதிய ‘ஸ்பரிசம்’  சிறுகதை படிக்க நேர்ந்தது. ஒற்றைச் சம்பவத்தைஅடிப்படையாக்க் கொண்ட மிகச்சிறிய கதையெனினும், படித்து முடித்தபின் வெகுநேரமாய்யோசிக்க வைத்தது.

கதையானது.. சிறுவயது முதலே தந்தையால் மிகுந்த கண்டிப்புடன்வளர்க்கப்படும் ஒருவன், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க ஊருக்குச்செல்கிறான். ரயிலேற்றிவிடும் தகப்பனார் அவன் கைகள் பற்றியபடி இருநூறு ரூபாய் தந்துஅறிவுரைகூறி வழியனுப்புகிறார். அந்த ஒரு சிறு ஸ்பரிசத்தில் தன் பழைய நினைவுகளைப்புரட்டியபடி பயணம் செய்கிறான் அவன். உறவுகளுக்குள் என்னதான் பிணைப்பிருந்தாலும்,ஒரு கட்டத்திற்குமேல் தொட்டு ஸ்பரிசிக்க முடிவதில்லை என்பதை அந்த உள்ளங்கைசூட்டில் உணர்கிறான்.

குழந்தையை முதன்முதலாய்த் தூக்கி உச்சிமுகரும்போது, இன்னும் சிலகாலத்திற்குப்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று யோசித்தவாறேமுத்தமிடுகிறான். அதே நேரம், ஊரில் அம்மாவிடம் அப்பாவும் இதையேசொல்லிக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது.

கதையம்சம் சாதாரண சம்பவம்தானெனினும் உட்கருத்து என்னவோ மனதைஅழுந்தச்செய்கிற உண்மை.

கடைசியாக என் அப்பாவின் உள்ளங்கை சூடு எப்போது உணர்ந்தேன்?? என்தாயின் உச்சிமுத்தம் எப்போது கிடைக்கப்பெற்றேன்? சகோதரியின் தோள் தட்டிகட்டிப்பிடித்த்து நினைவிலேயே இல்லாமல் போய்விட்டது..

வாழ்வில் ஸ்பரிசம் என்பது மிக முக்கியமானது. ஒரு தொடுகை நிகழ்த்திவிடும்அற்புதம், அலாதியானது. கட்டிப்பிடித்து இதழ் கவ்வுதும், புணர்வதும் மட்டும்ஸ்பரிசமாகாது. காய்ச்சலடிக்கும்போது அக்கறையாய் நெற்றி தொட்டுப்பார்ப்பது கூடஸ்பரிசம் தான். நட்புக்களில் அனிச்சையாய் கரம்பிடித்துப் பேசுதல் கூட சலனமில்லாஸ்பரிசம் தான்..!

குழந்தைப் பருவத்தைக் கடந்தபின் யாருமே எட்டி நின்று நலம்விசாரிப்பதோடு சரி..! அருகமர்ந்து பேசும்போது கைபிடித்து, விரல்கோர்த்துப் பேசும்காதல் உறவில்கூட, குறிப்பிட்ட வயதிற்கு அல்லது காலத்திற்குப்பின் இவ்விடைவெளிதோன்றிவிடக்கூடும்.

ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும்சார்ந்தது..!

நீங்கள் கடைசியாய் எப்போது உங்கள் தந்தையின் கரம் பிடித்துப்பேசுனீர்கள்?






Friday, March 27, 2015

நீ எனக்கு

Nandri : இந்திரா கிறுக்கல்கள்

Source : http://chellakirukkalgal.blogspot.com/2010/06/blog-post_14.html

 






பிறவிக் குருடனுக்கு கிடைத்த ஐந்து நிமிடப் பார்வை - நீ

பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் தாயின் முத்தம் - நீ

தூக்குக் கைதிக்கு நிறைவேற்றப்படும் கடைசி விருப்பம் - நீ

திருந்தியவனுக்கு வழங்கப்படும் பாவமன்னிப்பு - நீ

தொடர் தோல்விக்குப் பின் பெறும் முதல் வாய்ப்பு - நீ

அடைமழையில் சிறுவன் பொறுக்கும் ஆலங்கட்டி - நீ

பதில் எதிர்பார்க்கும், தெரிவிக்கப்பட்ட ஒரு தலைக் காதல் - நீ

விதவை நினைவிலிருக்கும் காதல் வாழ்க்கை - நீ

முதல் பதவியை தவறவிட்ட ஒற்றை மதிப்பெண் - நீ

அடிமை வேலைக்கு கிடைத்த விடுமுறை நாட்கள் - நீ

முத்துக் குளிப்பவன் அடக்கும் ஆழ மூச்சு - நீ

திரும்பக் கிடைத்த தொலைந்த சான்றிதழ் - நீ

பாலைவன மணல் மீது விழும் சிறு தூரல் - நீ

யுகங்கள் தவமிருக்கும் யோகிக்குத் தெரியும் ஜோதி - நீ

சிறுமியின் புத்தகம் நடுவிலிருக்கும் ஒற்றை மயிலிறகு - நீ

அன்னை ரசிக்கும் மழலையின் உறக்கப் புன்னகை - நீ

நாளிதழில் பரீட்சை எண் தேடும் மாணவப் பதற்றம் - நீ

தனிமையில் நினைவலைகள் சிந்தும் கண்ணீர்த்துளி ௦- நீ

சந்தித்த தோழர்களுக்கு இடையே நிகழும் முகமலர்ச்சி - நீ

பேச ஏங்கிய தோழியிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு - நீ

என் வாழ்வின் வசந்த கால அத்தியாயங்களின் தொகுப்பு - நீ

Monday, March 16, 2015

எந்தன் பொன் வண்ணமே


படம்       :    நான் வாழவைப்பேன்
இசை     :    இளையராஜா
பாடியவர்கள்    :  டி.எம்.சௌந்தர்ராஜன்
பாடலாசிரியர்  :  கண்ணதாசன்
டைரக்சன்    :     டி.யோகானந்த்


-----------------------

எந்தன் பொன் வண்ணமே
அன்பு பூ வண்ணமே
எந்தன் பொன் வண்ணமே
அன்பு பூ வண்ணமே
 நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா

கோவில் இல்லை என்றால் தெய்வம் இல்லை
இங்கு நீ இல்லையேல் கண்ணே நானும் இல்லை
வானம் இல்லை என்றால் மதியும் இல்லை ;
உந்தன் வார்த்தை இல்லையென்றால் கீதம் இல்லை

நீ வந்ததால் தானே பூ வந்தது
நீ வாடினால் வண்ண பூ வாடுமே
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு    (எந்தன் பொன் வண்ணமே...)

பொன்னை கண்டேன் அதில் உன்னை கண்டேன்
காலை பொழுதை கண்டேன் இந்த கதிரை கண்டேன்
என்னை கண்டேன் நெஞ்சில் உறவை கண்டேன்
நீயும் இல்லையென்றால் நானும் எங்கே செல்வேன்

தாய் செய்ததே தவம் நாம் வந்தது
தாய் கொண்டதே வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு      (எந்தன் பொன் வண்ணமே...)

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை;
நீ கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
காலம் வரும்; அந்த தெய்வம் வரும்
அந்த நாளும் வரும் நல்ல வாழ்வும் வரும்

காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உன்னை நான் வாழ வைப்பேன்

என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு       (எந்தன் பொன் வண்ணமே...)

----------------------------

For details on the movie/song background and sequence please refer to this below link

http://mayyam.com/archives/showthread.php?3-SIVAJI-SEASON-ENDHAN-PON-VANNAME

Saturday, March 14, 2015

உண்மையில் காதல் என்பது


நன்றி : சரண்யா செல்வநாதன்  ( FB : சரண்யா செல்வநாதன்  )

Courtesy & Thanks (Source) :
https://www.facebook.com/shaliny.sara?fref=ts

உண்மையில் காதல் என்பது என்ன?

கண்ணை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
பார்வை இல்லாதவர்களுக்க ு காதல் வராதா?

நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
கருப்பானவர்களுக ்கு காதல் வராதா?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா?

இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
இடமில்லாதவனுக்க ு காதல் வராதா?

பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால் பேச
இயலாதவனுக்கு காதல் வராதா?

படிப்பை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் படிக்காதவனுக்கு காதல் வராதா?

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்
ஒரு இதயத்திற்கு உண்மையான
அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ அங்கு உருவாகும்
ஒரு உன்னதமான உறவுக்கு
பெயர் தான் "காதல்"!!

----------------------------------------------

இந்த கவிதைக்கு பொருத்தமான காணொளி என்று  நினைக்கிறேன் இதை


-------------------------------------------

இந்த பதிவை படித்தால் காணொளியை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள முடியும்

நன்றி :  tamilsvoice.com

Courtesy & Thanks (Source) :  http://www.tamilsvoice.com/archives/36285


என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக்கொள்ளம்மா! முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட (Parallax) முன்னாள் போராளி தனது உயிர் பிரியும் நேரத்தில் கூறிய வார்த்தை இது!

March 8, 2015

கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் 06.03.2015 அன்று மரணமடைந்தார்.இவர் 2009ம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச்சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

இவரது தகப்பனார் தாயை விட்டுப்பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.

தர்சினி தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறியே, முன்னாள் போராளிக்கு வாழ்க்கை கொடுத்து, நான்கு வருடங்களாக வாழ்ந்து வந்தது பெரும் தியாகம் ஆகும்.

முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார். நேரில் துக்கம் விசாரிக்க சென்ற வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தனிடம் ஜெயக்குமாரின் தாயார் புஸ்பலதா கண்கலங்கி தெரிவித்தார்.

நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் , தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்புகளுக்கு: 0094 7744 92555, 0094 7765 22735


ltte